அருமனை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

அருமனை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

அருமனை:

அருமனை அருகே உள்ள அண்டுகோடு ஈந்திக்காலை பகுதியை சோந்தவர் ரவி (வயது 45), கூலி தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. தற்போது ரவி குடும்பத்துடன் திருத்துவபுரம் பகுதியில் வசித்து வருகின்றார். ரவி அவ்வப்போது சொந்த ஊரான அண்டுகோடு வந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ரவி சொந்த ஊரான ஈந்திகாலைக்கு வந்தார். அங்கு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரவி விஷம் குடித்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com