விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை சய்து கொண்டார்.
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45), தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 10-ந் தேதி பயிறுக்கு போட வைத்திருந்த பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆனந்தனின் மனைவி சரஸ்வதி கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com