குடும்ப தகராறில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குடும்ப தகராறில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப தகராறில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

அரியலூர் மாவட்டம், நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகாசன்(வயது 56). கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடைய இவர் தினமும் குடித்துவிட்டு வருவதால் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்றும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மனம் உடைந்த அவர் பருத்தி செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com