தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மெஞ்ஞானபுரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மேல மாநாட்டைச் சேர்ந்த பாண்டி மகன் லட்சுமணன் (வயது 35), கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலையில் இவரது மனைவி கிருஷ்ணதேவி (31) கூலி வேலைக்கு சென்று விட்டார். லட்சுமணன் மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் மதியம் லட்சுமணன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com