தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நாங்குநேரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள தெற்கு சிங்கநேரியைச் சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவபெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com