தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா வடமணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27), தொழிலாளி. இவர், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முருகனின் மனைவி சுகந்தி கொடுத்த புகாரின் பேரில் மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com