தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளி. இவருடைய 2-வது மகன் கார்த்திக் ராஜா (22). இவர் தனியார் கேட்டரிங்கில் கூலி வேலை செய்து வந்தார். இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இரவு நேரங்களில் அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டு மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அவரது தாயார் கண்டித்து உள்ளார். இதனால் வாழ்க் கையில் விரக்தி அடைந்த கார்த்திக்ராஜா வீட்டின் விட்டத்தில் மஞ்சள் நிற வேட்டியில் தூக்குப்போட்டு தொங்கினார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com