தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணாகி சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் அன்பழகன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அன்பழகனை, சகுந்தலா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அன்பழகன் வீட்டில் தூக்குமாட்டி கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்ச பலனின்றி அன்பழகன் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com