திருவள்ளூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் தயாநிதி (வயது 21). கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக தயாநிதி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் தன்னுடைய அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com