விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை
Published on

தொழிலாளி

திருவள்ளூர் பெரிய எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் செல்வம் திருவள்ளூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஏரிக்கரையில் மயங்கி விழுந்து கிடந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரது மகன் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற மகன் பிரபாகரன் மயங்கி கிடந்த செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

தற்கொலை

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்ததும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து பிரபாகரன் நடந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com