மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

அரியலூர் அருகே மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். உடல் அழுகியதால் கடும் துர்நாற்றம் வீசியது.
மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
Published on

மனைவி பிரிந்து சென்றார்

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் இந்திரா நகர் ராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சின்னராசு மகன் செந்தில்குமார்(வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கும், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரை சேர்ந்த முருகன் மகள் யமுனாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக யமுனா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் செந்தில்குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

தற்கொலை

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிமையில் இருந்த செந்தில்குமார் வீட்டில் தூக்குப்போடு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அவரது உடல் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, செந்தில்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் அழுகி காணப்பட்டார். இதையடுத்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து செந்தில்குமாரின் அண்ணன் மாயவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com