கிணற்றில் தையல் தொழிலாளி பிணம்

மோகனூரில் கிணற்றில் மிதந்த தையல் தொழிலாளி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் தையல் தொழிலாளி பிணம்
Published on

மோகனுர்

திருச்செங்கோடு அடுத்த பொம்மம்பட்டியை சேர்ந்தவர் சத்தியகுமார் (வயது38). இவர் மோகனூர் அடுத்த பரளி கடக்கால்புதூரில் தங்கி, தையல் தொழில் செய்து வந்தார். இவருக்கு கோமதி (35) என்ற மனைவியும், மகன்களும் உள்ளனர். இவருக்கு குடிபழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றவர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நேற்று பரளி அருகே உள்ள ஒரு கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மோகனூ போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியகுமார் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com