கிணற்றில் தொழிலாளி பிணம்

பழனி அருகே கிணற்றில் தொழிலாளி ஒருவர் பிணமாக மிதந்தார்.
கிணற்றில் தொழிலாளி பிணம்
Published on

பழனி அருகே உள்ள சின்னாரக்கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 24). கூலித்தொழிலாளி. நேற்று இவர், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிணற்றில் தவறி விழுந்து காளிமுத்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com