வாகனம் மோதி தொழிலாளி சாவு

வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வாகனம் மோதி தொழிலாளி சாவு
Published on

ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஆம்பூர்-வாணியம்பாடி சாலையில் வீரக்கோவில் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமுவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் ராமுவை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com