வாகனம் மோதி தொழிலாளி சாவு

கரிவலம்வந்தநல்லூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
வாகனம் மோதி தொழிலாளி சாவு
Published on

சங்கரன்கோவில்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆசிலாபுரம் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 61). டீக்கடை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வேலாயுதபுரம் கிராமம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com