வாகனம் மோதி தொழிலாளி சாவு

ஆம்பூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
வாகனம் மோதி தொழிலாளி சாவு
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சோமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 59), ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாலு சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com