தேங்காய் குலை தலையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு


தேங்காய் குலை தலையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
x

தென்னையின் கீழ் நின்று நீண்ட கம்பு கொண்டு, தேங்காய் பறிக்க முயன்றார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி நெடுங்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). இவருடைய மனைவி அன்னலட்சுமி (32). இவர்களுக்கு குரு ஸ்ரீ (13) என்ற மகளும், பிரசாத் (6) என்ற மகனும் உள்ளனர். சீனிவாசன் தேங்காய் பறிக்கும் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறித்தார். தென்னையின் கீழ் நின்று நீண்ட கம்பு கொண்டு, தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது விபரீதமாக தேங்காய் குலை சீனிவாசன் தலையில் விழுந்தது. குலையில் இருந்த தென்னம்பாளை அவரது கழுத்தில் குத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

1 More update

Next Story