விஷம் குடித்து தொழிலாளி சாவு

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து தொழிலாளி இறந்தார்
விஷம் குடித்து தொழிலாளி சாவு
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள பழங்கள்ளிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது63). விவசாய தொழிலாளி. இவருக்கு கடன் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com