அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு

அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்தா.
அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
Published on

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 34). இவருக்கு திருமணமாகவில்லை. கூலித்தொழிலாளி. ஜெகநாதனுக்கு மது குடிக்கும் உண்டு. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ஜெகநாதன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. நேற்று பகலில் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றபோது மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜெகநாதனை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெகநாதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com