மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
Published on

வேதாரண்யம்:-

வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் வைத்தி. இவருடைய மகன் அருண் (வயது26). தொழிலாளி. இவருக்கு வடிவழகி என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சம்பவத்தன்று இவர் வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கு தோப்புத்துறை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மதியம் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள மின் மோட்டார் அறைக்கு சென்று அங்குள்ள இரும்பு கதவிற்கு அருகே அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com