மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு

நெல்லையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
Published on

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வண்ணார்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com