

தருவைகுளம்:
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஓம்சக்திநகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் காளியப்பன் (வயது 22). மாநகராட்சி ஒப்பந்த தூய்மை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சுனாமிநகரை சேர்ந்த வினிஸ்டன் (19), ஓம்சக்திநகரை சேர்ந்த ஆனந்தவேல் (20) ஆகியோருடன் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டு இருந்தார். அவர்கள் தெற்கு கல்மேடு பாலம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர்.
இதில் பலத்தகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காளியப்பன் பரிதாபமாக இறந்தார். ஆனந்தவேல், வினிஸ்டன் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.