சாலை விபத்தில் தொழிலாளி சாவு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
சாலை விபத்தில் தொழிலாளி சாவு
Published on

விழுப்புரம் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிதாஸ் மகன் தினேஷ் (வயது 33), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வளவனூர் சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து சாலையாம்பாளையத்திற்கு புறப்பட்டார். அற்பிசம்பாளையம் என்ற இடத்தில் வரும்போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com