போதையில் மின்கம்பத்தை தொட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சாலையின் சென்டர் மீடியனில் இருந்த மின்கம்பத்தை தொட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
போதையில் மின்கம்பத்தை தொட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Published on

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் போதையில் மின்கம்பத்தை தொட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்துரு என்ற கூலித்தொழிலாளி மதுபோதையில் சாலையை கடந்துள்ளார். அப்போது சாலையின் சென்டர் மீடியனில் இருந்த தெருவிளக்கு மின்கம்பியை தொட்டுள்ளார்.

எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார் சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com