தொழிலாளி வீட்டில் திருட்டு

போடியில் தொழிலாளி வீட்டில் திருடியரை போலீசார் தேடி வருகின்றனர்
தொழிலாளி வீட்டில் திருட்டு
Published on

போடி முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவர் நேற்று மவேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவரது மனைவி சிவகாமி போடி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த சிவமணி என்பவர் வீடு புகுந்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர் 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com