திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

திருவெண்ணெய்நல்லூர், 

கண்டாச்சிபுரம் தாலுகா நெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஏழுமலை (வயது 35). கட்டிட தொழிலாளியான இவர் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் சென்ட்ரிங் இரும்பு கம்பியை மேலே தூக்கி பிடித்தபோது, திடீரென அந்த கம்பி அவ்வழியாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி ஏழுமலை தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com