மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

ஆற்காடு குட்டைக்கார தெருவை சேர்ந்தவர் முருகன் என்கிற முரளி (வயது 46). கம்பி கட்டும் தொழிலாளியான இவர் வாலாஜா அடுத்த கீழ் தேவதானம் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டின் மாடியின் மீது கம்பி கட்ட ஏறினார். அப்போது மாடியின் மேல் சென்ற மின்சார கம்பி அவர் மீது பட்டதில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com