மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தக்கோலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

தக்கோலம் மேல்தெருவை சார்ந்தவர் செல்வம் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் மின்விசிறி பழுதானதால் அதனை சரி செய்ய முயற்சித்துள்ளார். அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தக்கோலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com