கார் மோதி தொழிலாளி சாவு

கீழையூரில் கார் மோதி தொழிலாளி சாவு
கார் மோதி தொழிலாளி சாவு
Published on

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தனபாலன் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது இருசக்கர வாகனத்தில் கடைத்தெருவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேளாங்கண்ணியில் இருந்து பின்னால் வந்த கார் திடீரென தனபாலன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தனபாலனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தனபாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com