அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

திண்டுக்கல்லில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
Published on

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் வின்சென்ட்சேவியர் (வயது 56). சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், பழனி சாலையில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக வின்சென்ட் சேவியர் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த மேற்கு போலீசார் விரைந்து வந்து வின்சென்ட் சேவியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com