விழுப்புரம் அருகே ரெயில் மோதி தொழிலாளி சாவு

விழுப்புரம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் அருகே ரெயில் மோதி தொழிலாளி சாவு
Published on

விழுப்புரம் அருகே உள்ள காணை மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்புராயலு மகன் கார்த்திகேயன் (வயது 41). இவர் மாம்பழப்பட்டில் உள்ள எலும்பு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களாக விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் கண்டமானடியில் இருந்து காணைக்கு புறப்பட்டார். அப்போது கண்டமானடி ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com