ரெயில் மோதி தொழிலாளி பலி

அரக்கோணம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

அரக்கோணத்தை அடுத்த சித்தேரி பகுதியை சேர்ந்த தனபால் மகன் டில்லி பாபு (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது அரக்கோணம் மார்கத்தில் வந்த ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com