ரெயில் மோதி தொழிலாளி பலி

அம்பாத்துரை அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூசைராஜ். (வயது 57). இவர் திண்டுக்கல்லில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்கு அம்பாத்துரையை அடுத்த வெள்ளோடு ரெயில்வே கேட் அருகே தண்டவாள ஓரத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்னையில் இருந்து சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிப்பட்டு சூசைராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூசைராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சூசைராஜூக்கு டெய்சிகலா மேரி என்ற மனைவியும் அந்தோணிராஜ், ஆல்பட்ராஜ் என்ற 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com