ரெயில் மோதி தொழிலாளி பலி

சங்கரன்கோவில் அருகே ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள சென்னிகுளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). மில் தொழிலாளி. இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜேந்திரனுக்கு முருகலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com