ரெயில் மோதி தொழிலாளி பலி

நெல்லை அருகே ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

நெல்லை அருகே நடுக்கல்லூர் ரெயில்வே பீடர் தெருவைச் சேர்ந்தவர் பகவதி (வயது 40). கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி சென்றபோது, அந்த வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பகவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பகவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com