ரெயில் மோதி தொழிலாளி பலி

காட்பாடி அருகே ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேனூர் கிராமம் பள்ளிகூட தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரபு (வயது 31), வெல்டிங் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு தனது ஊர் அருகே உள்ள மற்றொரு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்கு திரும்பினார்.

லத்தேரி-காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஆட்டியா ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரெயில் பிரபு மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com