சின்னசேலம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

சின்னசேலம் அருகே ரெயில் மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சின்னசேலம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி கிராமத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவா கடக்க முயன்றார். அந்த சமயத்தில் விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் அந்த நபர் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த நபரின் சட்டை பையில் இருந்த ஆவணங்களை பார்வையிட்டதில், அவர் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் பெரியசாமி (வயது 45) என்பதும், கூலி வேலைக்காக இங்கு வந்தபோது ரெயில் மோதி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனிடையே கூலி தொழிலாளி பெரியசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com