வாகனம் மோதி தொழிலாளி பலி

குள்ளனம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகன மோதியதில் தொழிலாளி பலியானார்.
வாகனம் மோதி தொழிலாளி பலி
Published on

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்றது.

அப்போது எதிரே வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com