மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஆத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

ஆத்தூர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா ஆற்றுப்பாதை பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 42). இவர் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மழை பெய்த போது அவர் தங்கியிருந்த குடிசையின் மேலே போடப்பட்டிருந்த தகரத்தில் இருந்து தண்ணீர் ஒழுகியது. சம்பவத்தன்று அதை சரி செய்யும் பணியில் ராஜா ஈடுபட்டார். அப்போது எதிபாராத விதமாக மேலே சென்ற மின்சார வயர் மீது தகரம் பட்டது. இதில் ராஜா மீது மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டார்.

பின்னர் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com