தொழிலாளிக்கு கத்திக்குத்து

நிலக்கோட்டை அருகே, தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொழிலாளிக்கு கத்திக்குத்து
Published on

நிலக்கோட்டை அருகே உள்ள அவ்வையம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 59). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த ஜெகன், சின்னத்துரை ஆகியோர் தங்கள் நிலத்தில் இருந்து அருகே உள்ள மயான பகுதியில் மண்ணை கொட்டினர். இதனை வெள்ளைச்சாமி தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சின்னத்துரை கட்டையால் வெள்ளைச்சாமியை தாக்கியதாகவும், ஜெகன் கத்தியால் குத்தியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் வெள்ளைச்சாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தார். தலைமறைவாக உள்ள ஜெகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com