தொழிலாளி தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தற்கொலை
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் கஸ்பா மடத்துதெருவை சேர்ந்தவர் இசக்கி மகன் மாரியப்பன் (வயது 47) இவர் தனியார் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்தார். உடனடியாக இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மாரியப்பன் இறந்தார். இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com