வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்

வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உத்தரவு.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்
Published on

சென்னை,

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குனர்-2 ச.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினமான 6-ந் தேதியன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135பி-ன் படி சம்பளத்துடன் கூடிய விடுமுறையை தொழிலாளர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும்.

சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com