வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் முக கவசம், கையுறை அணிவதை உறுதி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் முக கவசம், கையுறை அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்கள் முக கவசம், கையுறை அணிவதை உறுதி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

வீடுகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளி, கொரோனா வைரஸ் தொற்றினால், இறந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கு வகையில் காப்பீடு திட்டத்தை உருவாக்கவேண்டும். அந்த தொழிலாளருக்கு என்.95 முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கிற்கு மத்திய அரசு பதில் அளித்தது. அதில், சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளி கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

மேலும் தொழிலாளர்களுக்கு முக கவசம் கையுறை, சோப் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்று கியாஸ் வினியோகம் செய்யும் முகவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுடன் ஏற்கனவே மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர், சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறதா? அவர்கள் அதை முறையாக பயன்படுத்துகின்றனரா? என்பதை திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு பெட்ரோலியத்துறை அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com