உலக சுற்றுச்சூழல் தினம்: பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி- எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாலாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவல்துறை சார்பாக ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாலாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவல்துறை சார்பாக ஓவிய போட்டி நடத்தப்பட்டது. ஓவிய போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரைந்தனர். இப்போட்டியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக நடத்தப்பட்டது.
இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரில் அழைத்து, அவர்களின் கலை திறமையை பாராட்டும் விதமாக சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வின்போது திருநெல்வேலி மாவட்ட தலைமையகம் ஏ.டி.எஸ்.பி பாலசுப்பிரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புபிரிவு ஏ.டி.எஸ்.பி. சண்முகம், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.






