திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி


திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி
x

மக்கும், மக்கா குப்பையை பிரித்து மண்புழு உரம் தயாரித்து மண் வளத்தை பெருக்குவேன் என்று கூறி போலீசார் உறுதிமொழி எடுத்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உலக சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி எடுத்தனர். அப்போது அவர்கள் அனைவரும், "இவ்வுலகில் வாழும் பலதரப்பட்ட வாழ்வுயிர்களில் ஒருவனாகிய நான், இவ்வுலகில் வாழும் குடிமக்களின் வாழ்க்கைக்கான ஆதாரமாக திகழும் சுற்றுச் சூழலின் முக்கியத்தை உணர்ந்து, விலங்குகள், தாவரங்கள் மற்றும் இதர வாழ்வுயிர்களும் இப்புவியில் இணைந்து உயிர் வாழ பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்கப் பாடுபடுவேன் என்றும், சூழலியல் பராமரிப்பின் பயன்களையும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் செயல்களின் பலன்களையும் மக்களுக்கு பயிற்றுவிப்பேன் என்றும், மக்கும் மக்கா குப்பையை பிரித்து மண்புழு உரம் தயாரித்து மண் வளத்தை பெருக்குவேன் என்றும், சுற்றுச் சூழலிற்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்கு அளிக்கும் எந்தவொரு பொருளுக்கும் இம்மண்ணில் இடம் தர மாட்டேன் என்றும், பொறுப்புள்ள ஒரு மனிதனாய், சுற்றுச் சூழலுக்கு எந்த வித களங்கமும் மாசும் ஏற்படாத வகையில் சமாதான சக வாழ்வினை மேற்கொள்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்" என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

1 More update

Next Story