உலக தந்தையர் தினம் - செல்வபெருந்தகை வாழ்த்து

தங்களது கனவுகளைத் தியாகம் செய்து பிள்ளைகளின் கனவுகளை நனவாக்க பாடுபடும் ஒவ்வொரு தந்தைக்கும் இந்த நாள் மரியாதை செலுத்தும் நாளாகும்.
செல்வபெருந்தகை
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தந்தையர் தின நல்வாழ்த்துகள்

உலக தந்தையர் தின நல்வாழ்த்துகள். அன்பு, அர்ப்பணிப்பு, தியாகம், பொறுப்பு ஆகியவற்றின் மறுவடிவமாக விளங்கும் அனைத்து தந்தையர்களுக்கும் உலக தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

குடும்பத்தின் நம்பிக்கையாகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் வழிகாட்டியாகவும் திகழும் தந்தையர்களின் உழைப்பும் அக்கறையும் அளவிட முடியாதவை. தங்களது கனவுகளைத் தியாகம் செய்து பிள்ளைகளின் கனவுகளை நனவாக்க பாடுபடும் ஒவ்வொரு தந்தைக்கும் இந்த நாள் மரியாதை செலுத்தும் நாளாகும்.

'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை; தந்தை அன்பிற்கு ஈடு இணையில்லை.'

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com