உலக பாரம்பரிய வாரம் - மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி பார்வையிடலாம்

இதேபோல், மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய வாரம் - மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி பார்வையிடலாம்
Published on

World Heritage Week - Mamallapuram's ancient monuments can be visited free of charge todayசென்னை,

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கைள இன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னமான கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம், 5 ரதம் உள்ளிட்டவைகளை காண கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி இந்த புராதனச் சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதித்து தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com