குளச்சலில் உலக பெருங்கடல் தினம்; கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் குளச்சல் கடற்கரையில் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
குளச்சலில் உலக பெருங்கடல் தினம்; கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை
Published on

கன்னியாகுமரி:

உலகம் முழுவதும் ஜூன் 8 ம் தேதி உலக பெருங்கடல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் குளச்சல் கடற்கரையில் உலக பெருங்கடல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர்,குடும்பத்தினர் கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு பொதுச்செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் மீனவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உறுதிமொழியில் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுப்போம், குப்பைகளை கடலில் கொட்ட மாட்டோம், கடலையும் கடல் உயிரினங்களையும் பாதுகாப்போம் என உறுதிமொழியில் கூறினர்.

மேலும் கடல் நீரிலிருந்து பயோ டீசல் தயாரித்து கடல் வாகனங்களுக்கு வழங்க வேண்டும், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், கடலில் கழிவுகளை கலக்கும் ஆலைகளுக்கும் கப்பல்களுக்கும் எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com