உலக புகைப்பட தினம்; புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலக புகைப்பட தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலக புகைப்பட தினம்; புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

உலக புகைப்பட தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள புகைப்பட கலைஞர்கள் மற்றும் புகைப்பட ரசிகர்கள், விரும்பிகள் வித்தியாசமான புகைப்படங்கள் எடுத்து இந்த நாளை கொண்டாடுகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு இன்று உலக புகைப்பட தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட தினத்தை கொண்டாடும் வகையில் புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து உலக புகைப்பட தினத்தை கொண்டாடினார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com