உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்: பதக்கம் வென்ற தமிழக காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு


உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்:  பதக்கம் வென்ற தமிழக காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு
x
தினத்தந்தி 21 July 2025 3:41 PM IST (Updated: 21 July 2025 4:35 PM IST)
t-max-icont-min-icon

இந்த விளையாட்டு போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.

சென்னை,

உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2025, அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இம்மாத 06-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு அணி சார்பாக தமிழக காவல்துறையிலிருந்து காவலர்கள் தினேஷ், அர்ஜூன் மற்றும் ஹரிகிருஷ்ணன். பெண் காவலர்கள் இளவரசி மற்றும் சரண்யா ஆகியோர் பங்குப்பெற்று முறையே 3-தங்கம், 4-வெள்ளி மற்றும் 4-வெண்கலம் ஆக மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.

மேலும், இதே போட்டியில் வயது வகைப் பிரிவில் மயில்வாகனன். இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர் உடன் 6-ஆய்வாளர்கள், 1-சார்பு ஆய்வாளர், 1-சிறப்பு சார்பு ஆய்வாளர், 4-தலைமை காவலர் மற்றும் 3-பெண் தலைமை காவலர் ஆகியோர் பங்குப்பெற்று முறையே 19-தங்கம், 11-வெள்ளி மற்றும் 9-வெண்கலம் ஆக மொத்தம் 39 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்கண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை காவல்துறை தலைமை இயக்குநர். படைதலைவர். சங்கர் ஜிவால் இ.கா.ப. நேரில் அழைத்து பதக்கம் வென்ற அனைவரையும் பாராட்டினார். விஜய குமாரி, இ.கா.ப., காவல்துறை தலைவர், (ஆயுதப்படை) மற்றும் பிரவீன் குமார் அபினபு, இ.கா.ப., காவல்துறை தலைவர், (பொது) ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story